Sunday, August 19, 2018

மஹிமை நிறை மீனாக்ஷி (Meenakshi Bhajan)



மஹிமை நிறை மீனாக்ஷி   
மதுராபுரி மீனாக்ஷி 
அன்பு நிறை மீனாக்ஷி 
ஆலவாய் மீனாக்ஷி 

அனலில் உதித்த  மீனாக்ஷி 
அருட்புனலே மீனாக்ஷி 
அங்கயற்கண்ணி மீனாக்ஷி
பங்கயற் பாத மீனாக்ஷி 

மரகத மீனாக்ஷி
மங்கலம் பொழி  மீனாக்ஷி 
திக்விஜய மீனாக்ஷி 
த்ரிபுரசுந்தரி மீனாக்ஷி

சொக்கனின் மீனாக்ஷி
சொக்கத் தங்கம் 
மீனாக்ஷி (என்)
பக்க பலம் மீனாக்ஷி
படைக்கலம் மீனாக்ஷி

 (என்)  அன்னை தந்தை மீனாக்ஷி
குரு தெய்வம் மீனாக்ஷி
(என்) அகத்தொளிர் மீனாக்ஷி
அனைத்தும் எனக்கு மீனாக்ஷி(யே).

சிவம் சுபம்

No comments:

Post a Comment