Sunday, August 19, 2018

குருகுஹ ஸ்வாமி நாதரே

OM 

குருகுஹ ஸ்வாமி நாதரே - சத்
குருநாத மஹா ஸ்வாமியே

ப்ரணவப் பொருள் உரைத்த ஷண்முகரே,
வேத சாரம் உரைத்த சந்த்ர 
சேகரரே

காஞ்சி குமரக் கோட்டரே
காமகோடீஸ்வர ஸர்வஞ்ரே
சக்தி கர வடி வேலரே
ஷண்மத தண்ட வேந்தரே

எதிர்த்தோரை  ஆட்கொண்ட எழிலரசே
மதியீனரை  மாற்றும் அருளரசே
மயில் மீது அமரந்தருளும் வள்ளலே - அன்பர்
மன அரங்கத் தொளிரும் ஜோதியே

பஞ்சலிங்க பக்த செந்தூரரே,
பஞ்சாக்ஷர ஜெப வெண்ணீறரே
நாராயணன் மருக முருகரே,
நாராயண ஸ்ம்ருதி செய் மா-பெரியவரே

ஆறுபடை கொண்ட ஆறுமுகரே
அன்பர் படை சூழும் ஆச்சார்யரே
உலகை வலம் வந்த தெய்வமே,
உலகெங்கும் ஒலிக்கும் தெய்வக் குரலோனே

Sivam Subam

No comments:

Post a Comment