Sunday, August 19, 2018

அன்னை தோன்றிய நன்னாள்



அன்னை தோன்றிய நன்னாள்
ஆண்டவனை  ஆண்டவள் அவதரித்த திருநாள்.
இன் தமிழமுது பொழியத் துவங்கிய நாள்.
ஈடிலா திருத்துழாய் புகழ் கொண்ட நாள்.
உலகம் உய்ய வழி சமைந்த நாள். 
ஊழி முதல்வன் உள்ளம் நெகிழ்ந்த நாள்.
எழில் கீரவாணியைக் கண்டெடுத்த நாள்.
ஏற்றமிகு  பெரியாழ்வார் இல்லம் நிறைந்த நாள்.
ஐயமில்லா பக்திக் கொடி படரத் துவங்கிய நாள்.
ஒப்பிலா சமரச நெறி
ஓங்கிப் பெருகிய நாள்.
ஔதார்யப் பெருமகள் ஆண்டாளின் ஆடிப்பூரத் திருநாள்.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment