Sunday, August 19, 2018

"மீனாள் ஆண்டாள்"



"மீனாள் ஆண்டாள்"

அனலில் உதித்தாள் அங்கயற்கண்ணி
புவிமகளாய் தோன்றினாள்
கோதையாம் கன்னி

வலக்கர கீரவாணி மீனாள்
இடக்கர கிள்ளை மொழியாள் ஆண்டாள்.

மதுரையின் மாண்பு மங்கை மீனாள்.
வில்லியின் பெருமை நங்கை ஆண்டாள்,
சங்கத் தமிழ் தலைவி மீனாள்.
சந்தத் தமிழ் சுவை ஆண்டாள்.

அரன் கரம் பிடித்தாள்பவள் மீனாள்,
அரங்கன் மனம் கவர்ந்தாண்டவள்  ஆண்டாள்,
பிள்ளைத் தமிழ் நாயகி மீனாள்.
கன்னித் தமிழ் செல்வி ஆண்டாள்.

ஆடிப்பூரத்தில் உதித்தாள் கோதை
ஆடிப்பூரத்தில் பூ சூடுவாள் தடாதகை,
கோதை அரங்கன் மனத்தில் அமர்ந்தாள்,
தடாதகை அரனை வலத்தில் கொண்டாள்.

கதம்பவனத்தாள் அன்னை மீனாள்.
துளசிவனத்தாள் அன்னை ஆண்டாள்.
சித்திரை சித்திரம் அன்னை மீனாள்.
மார்கழிப் பாவை மங்கை ஆண்டாள்.

கோதையை வணங்கி அரங்கனுள் கலப்போம்.
தடாதகையைத் தொழுது அரனுள்
நிலைப்போம்.
இருவரும் நம்மிரு கண்ணின் மணிகள், நம்
இதயத் யொளிரும் (ஜோதிச்) சுடர் மணிகள்.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment