Sunday, August 19, 2018

உடல் நலம் அளிப்பாய் வைத்ய புரீசா (Sindhu Bhairavi)


சிந்துபைரவி

உடல் நலம் அளிப்பாய் வைத்ய புரீசா
மன நலம் சேர்ப்பாய் சேரை வாசா

பரணிக் கரை வாழ் பசுபதீசா,  தரணி புகழும் தன்வந்த்ரி நேசா

அதுலாம்பா எனும் ஒப்பிலா நாயகி
உடனுறை ஈசா, ஸ்வயம் ப்ரகாசா,
திங்கள் தொழுதிடும் மங்கள ரூபா,
திருவடி சரணம் சந்திர சேகரா

ஆரோக்யத்துடன் அனுதினம் உன்னை,
வலம் வரும் திடமும் மனமும் அருள்வாய்,
மூச்சுள்ளவரை எந்நாளும் உன்
புகழைப் பாடும் திறமும் தருவாய்

சிவம் சுபம்

(சேரை - சேரன்மகாதேவி. நெல்லை மாவட்ட நவ கைலாயத்துள் திங்கள் வழி பட்ட தலம்.)

No comments:

Post a Comment