Sunday, August 19, 2018

கண்ணிரண்டும் கயல்கள், கரமதில் பச்சைக் கிளி (Hindholam)

OM

ஹிந்தோளம்

கண்ணிரண்டும் கயல்கள், கரமதில் பச்சைக் கிளி

மரகதத் திருமேனி, அதில் பாதி பவளச் செம்மேனி.

இருப்பதோ கூடல் மா நகர், ஆள்வதோ சிவ ராஜ தானி, அன்பர்க் கருள்வதே அவள் பணி,
அவளே அன்னை அங்கயற் கண்ணி.

நினைந்தால் நிம்மதி  தருவாள், பாடினால் புகழ் சேர்ப்பாள், நாடினால் ஓடி வந்திடுவாள், பணிந்தால் பணிபவர் உள் ஒளிர்வாள்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment