Sunday, August 19, 2018

சிவனார் வடிவில்லை அம்மா



சிவனார் வடிவில்லை அம்மா, சிவனே இவர் தானம்மா... 

பிறை மறைத்து மறை யெடுத்து நம் முறை கேட்டு குறை களைய வந்த சந்திர சேகர ஸரஸ்வதி அம்மா

(அய்யன்) கண் மலர்ந்தால் இக்ககனம் உய்யும். திருவாய் மலர்ந்தால்
வேத சாரம் பொழியும்.
கரமலர் விரிந்தால் கனகம் சொரியும் (அய்யன்)
மன மலர் நெகிழ்ந்தால்
மங்கலம் நிறையும்.

இருவர் தேடும் பதமதை பதித்து நடமாடும் தெய்வம் இவர் தானம்மா,
அப்பதமலர் இணையை நம் சிரமதில் சூடி இருவரும் காணா பெருநிலை பெறுவோம் இறையுள் நிலைப்போம். 

அய்யனுண்டு நமக்கு பயமில்லை, அவர்
அவருளுண்டு இனி வெற்றிக்கு குறைவில்லை.
ஜெய சந்த்ரசேகரா
ஹர சந்த்ரசேகரா
சிவ சந்த்ரசேகரா
சுப சந்த்ர சேகரா.....

சிவம் சுபம்.

No comments:

Post a Comment