5/4/18, 3:42 PM - Appa: OM ஸ்ரீரங்க நாமாவளி இராமன் குலதனம் ரங்கன் சங்கரர் அர்ச்சித்த ரங்கன் மத்வர் பூஜித்த ரங்கன் உடையவர் உடனுறை ரங்கன் (1) ஆண்டாளை ஆண்ட ரங்கன் ஆழ்வார்கள் பரவும் ரங்கன் அன்பர்கள் உள்ளுறை ரங்கன் வேதாந்த தேசிக ரங்கன் (2) புரந்தரவிடலன் ரங்கன் த்யாகைய்யர் இசைத்த ரங்கன் குருகுஹன்* மாமன் ரங்கன் வண்ணச்சரப ரங்கன்** (3) ஸ்வாதித் திருநாளன் ரங்கன் ஸ்ரவண நாயகன் ரங்கன் ஸுலப நாமன் ரங்கன் ஸுக்கிரனும் வணங்கும் ரங்கன்(4) காவேரி வருடும் ரங்கன் கம்பருக்கருளிய ரங்கன் வீடணன் கொணர்ந்த ரங்கன் விண் மாரி பொழியும் ரங்கன்(5) அரவணை துயிலும் ரங்கன் அனந்த சயன ரங்கன் அன்னையர் மருவும் ரங்கன் அகிலாண்டேஸ்வரி சோதரன் ரங்கன்(6) தமிழின் சுவை அரங்கன் ஸமுஸ்க்ருத ஸார ஸ்ரீ ரங்கன் பாதுகா ஸஹஸ்ர ரங்கன் பரமபத நாதன் ரங்கன்(7) பூலோக வைகுண்ட ரங்கன் நம் கலி தீர்க்க வந்த ரங்கன் பிரமனும் வணங்கும் ரங்கன் ப்ருந்தாவன சா- ரங்கன்(8) சிவம் சுபம் *தீக்ஷிதரின் முத்ரை குருகுஹன். (ரெங்க புர விஹார) **வண்ணச்சரப தண்டபாணி ஸ்வாமிகள் அரங்கனுக்கு "ஸ்ரீ ரங்கத்து ஆயிரம்" ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கு "திருமகள் அந்தாதி"யும் சூட்டி யிருக்கிறார்.
No comments:
Post a Comment